Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், திசையன்விளை நகர அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.குருநாதன் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதில் தம்மை இணைத்துக்கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர் குருநாதன். தென்மாவட்டங்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர். பா.ம.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் குருநாதன்.
குருநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்….
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….
Radhapuram canal: ராதாபுரம் கால்வாய்க்கு ஜூன் 16ஆம் தேதி முதல் இருப்பை பொறுத்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது….
திருநெல்வேலியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….
Actor Nepoleon files complaint: திருநெல்வேலி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், தனது மகன் தனுஷ்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்