Chennai International Airport | மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (திங்கள்கிழமை) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆண் பயணிகள் இருவர் சந்தேகப்படும் வகையில் இரண்டு பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, சாக்லேட், பிஸ்கட் மற்றும் பொம்மைகள் வைத்திருப்பதாக முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர். சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கூடைகளுக்குள் ஏராளமான சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். மேல் விசாரணைக்காக பெசன்ட் நகரில் உள்ள யூனியன் வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து, ஸ்லைடர் ஆமைகளை ஆய்வு செய்தனர்.
அவற்றில், 12 இறந்து கிடந்தன. மேலும், 19 அல்பினோ சிவப்பு காது ஸ்லைடர் ஆமை வகையைச் சேர்ந்தவை என்பதும் தெரியவந்தது. மேலும், கடத்தல் காரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மலேசியாவில் இருந்து எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியா வந்துள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆமைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, மற்ற விலங்குகளுக்கு தொற்று ஏதும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு நோக்கங்களுக்காக சுங்க அதிகாரிகள் 4,986 உயிருள்ள ஆமைகளை மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தனர், அதே நேரத்தில் இறந்த 12 ஆமைகள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டன.
இதையும் படிங்க
TVK Vijay: இது யாருக்கான ஆட்சி என கேள்வி எழுப்பி உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்; தமிழகம் ஆபத்தான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது என்பதையும்…
Sanitation workers on Arrest: ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக போலீசார் கைது…
SIR voter roll revision: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் இன்று (நவ.4, 2025) தொடங்கியது….
Coldrif owner arrested: கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு உரிமையாளர் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்….
Ennore Powerplant accident: எண்ணூரில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்