Menstrual abdominal pain | மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க டாக்டர் தீபா கூறிய எளிய வீட்டு மருத்துவம் பற்றி இப்போது பார்க்கலாம். பெண்க குழந்தைகள் பொதுவாக ஆரோக்கியமற்ற உணவு வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், சத்து இல்லாத உணவு பொருள்களை எடுத்துக் கொள்வதாலும், அதிகப்படியான மாமிச உணவு வகைகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை உட்கொள்வது வயிற்று வலிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மாதம் தோறும் ஏற்படும் இந்த வயிற்று வலி பிரச்னையில் இருந்து விடுபட ஒரு கிளாஸ் மோர் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயம், சிறிதளவு இடித்த இஞ்சி, கொத்தமல்லி இலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜரோன் வலி நிவாரணையாக செயல்பட்டு வயிற்று வலியை நீக்குகிறது. மேலும் இந்த பானத்தில் கலந்துள்ள பெருங்காயம் உடலில் வாயு தொல்லை ஏற்படாமல் தடுக்கிறது. வெந்தயத்தில் உள்ள பிளேவினாய்டுஸ் தசைகள் இறுக்கமாக இருப்பதால் ஏற்படும் வலியை நேர்த்தி செய்து வலியில்லாத மாதவிடாய் ஏற்பட வழிவகுக்கிறது.
இந்த பானத்தை குடிப்பதன் மூலம் மாத்திரை ஏதும் இல்லாமலே இயற்கை முறையில் வயிற்று வழியினை குறைக்க முடியும். பெண்கள் பொதுவாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாதம்தோறும் ஏற்படக்கூடிய வயிற்று வலியினை தடுக்க முடியும்.
இதையும் படிங்க
How to prevent eye strain: கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபர்கள் அடிக்கடி கண்களை சிமிட்டி கொள்ள வேண்டும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால்…
Pilots: விமானிகள் பெரும்பாலும் நீண்ட தாடிகள் வைப்பது இல்லை. இது ஏன் தெரியுமா? இதற்கும் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது….
International Workers’ Day 2025: தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களை கௌரவிக்கும் வகையில் உலகத் தொழிலாளர் தினம், மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது….
Summer Tips: நாடு முழுக்க கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு நாளைக்கு ஆண்கள், பெண்கள் எத்தனை…
இந்தியாவில் அதிகம் மது குடிக்கும் பெண்கள் உள்ள மாநிலங்கள் குறித்த ஆய்வை தேசிய குடும்ப சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்