Tirupati Paramapada Vasal Darshan Tickets: திருப்பதியில் 10 நாட்கள் பரமபத வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் நவம்பர் 28 முதல் வெளியிடப்படுகின்றன.
Tirupati Paramapada Vasal Darshan Tickets: திருப்பதியில் 10 நாட்கள் பரமபத வாசல் தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் நவம்பர் 28 முதல் வெளியிடப்படுகின்றன.

Published on: November 28, 2026 at 5:41 pm
திருப்பதி, நவ.28, 2026: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 20-ஆம் தேதி பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்று முதல் டிசம்பர் 29-ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது. இதற்கான தரிசன டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை நவம்பர் 28-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நவம்பர் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நவம்பர் 30-ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. டிசம்பர் 20, 21 ஆகிய முதல் இரண்டு நாட்களுக்கான நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டோக்கன்களைப் பெற, டிசம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை மின்னணு குலுக்கல் முறையில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்த பக்தர்களுக்கான டோக்கன்கள் டிசம்பர் 7-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மின்னணு குலுக்கல் மூலம் ஒதுக்கப்படும். நன்கொடையாளர் தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் முக்கியப் பிரமுகர்களைத் தவிர மற்றவர்களுக்கான விஐபி பிரேக் தரிசனமும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல் இரண்டு நாட்களிலும் மின்னணு குலுக்கல் மூலம் ஒதுக்கப்படும் சர்வ தரிசன டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 22 முதல் 29-ஆம் தேதி வரை முன்பதிவு இல்லாமல் வரும் பக்தர்களும் பொது தரிசனம் செய்யலாம்; இருப்பினும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.. நவ.29 நடக்கிறது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com