அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகள் 50% அதிகரிப்பு: புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் முக்கிய அம்சங்கள்!

50% Lok Sabha Seats Increase: அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகள் 50% அதிகரிக்கப்படும் என புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Published on: November 28, 2026 at 5:20 pm

புதுடெல்லி, நவ.28, 2026: நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், தொகுதி மறுவரையறை தொடர்பான புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 850 ஆக உயரும். இதில் மாநிலங்களுக்கான இடங்கள் 815 ஆகவும், யூனியன் பிரதேசங்களுக்கான இடங்கள் 35 ஆகவும் இருக்கும். மேலும், மாநிலச் சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் தற்போதைய எண்ணிக்கையிலிருந்து 50 சதவீதம் அதிகரிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 500-லிருந்து 650 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு, சட்டம் அமலுக்கு வரும் தேதிக்குள் வெளியிடப்பட்டுள்ள கடைசி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையிலான தற்போதைய மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் 2051-ஆம் ஆண்டு வரை பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீட்டுத் தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட முந்தைய அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் போதிய ஆதரவு கிடைக்காமல் தோல்வியடைந்தது. குறிப்பாக, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் விவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், புதிய மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத இட உயர்வு எழுத்துப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. இந்த மசோதா நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : தொகுதி மறுவரையறை என்றால் என்ன? மசோதா நிலுவையில் இருப்பது ஏன்?

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!
Rahul Gandhi Assets Case

ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகார்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி!
26/11 Mumbai Terror Attack Remembrance

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com