Pakistani Web Series Ban in India: இந்தியாவில் பாகிஸ்தான் வெப் தொடர்களை வெளியிடக் கூடாது என நெட்ஃபிளிக்ஸுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Pakistani Web Series Ban in India: இந்தியாவில் பாகிஸ்தான் வெப் தொடர்களை வெளியிடக் கூடாது என நெட்ஃபிளிக்ஸுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Published on: November 28, 2026 at 4:29 pm
புதுடெல்லி, நவ.28, 2026: பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெப் தொடர்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது என ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ‘Jo Bachay Hain Sang Samait Lo’ என்ற வெப் தொடரை இந்தியாவில் வெளியிட வாய்ப்புள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவுறுத்தலைப் பின்பற்றி, பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், வெப் தொடர்கள், பாடல்கள் உள்ளிட்ட எந்தவொரு ஸ்ட்ரீமிங் உள்ளடக்கமும் இந்தியாவில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட எந்தத் திரைப்படம் அல்லது தொடரையும் இந்திய சந்தாதாரர்களுக்கு வழங்கவில்லை என நெட்ஃபிளிக்ஸ் அரசிடம் உறுதியளித்திருந்தது.
இதற்கிடையே, ‘Jo Bachay Hain Sang Samait Lo’ தொடரின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி இந்தத் தொடர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஃபவாத் கான், மஹிரா கான், சனம் சயீத் உள்ளிட்ட பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துள்ளனர். எனினும், இந்தியாவில் இந்தத் தொடர் வெளியாகுமா என்பது குறித்து நெட்ஃபிளிக்ஸ் இதுவரை தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.
இந்தத் தொடரை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் மற்றும் மேற்கு இந்திய திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்தியாவில் இந்தத் தொடர் வெளியானால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் படப்பிடிப்புப் பணிகளை நிறுத்துவோம் என்றும் ஒரு அமைப்பு எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : பிரியங்கா நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’.. ‘கே.ஜி.எஃப்.’ இசையமைப்பாளர் இசை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com