‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம்: வீரர்களுக்கு மீண்டும் தண்டனை இல்லை.. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு!

Australian Cricket Controversy: ‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் தண்டனை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: November 27, 2026 at 12:43 pm

சிட்னி, நவ.27, 2026: 2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய ‘சாண்ட்பேப்பர்கேட்’ சர்ச்சை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனி விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இந்த விசாரணைக் குழு, 2017-18 ஆஷஸ் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது நடைபெற்ற பந்தின் தன்மையை மாற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும். மூத்த வழக்கறிஞர் ஃபியோனா மெக்லியோட் தலைமையில் இந்த விசாரணை 6 வாரங்கள் நடைபெற உள்ளது.

இந்த விவகாரத்தில் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், கேமரூன் பான்கிராஃப்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் விசாரணை நடத்தப்பட்டாலும், ஏற்கெனவே தண்டனை பெற்ற வீரர்களுக்கு கூடுதல் தண்டனை விதிக்கப்படாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா, பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து ஒட்டுமொத்த அணியினருக்கும் தெரியும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு தற்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விசாரணை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

இதையும் படிங்க : 53 பந்துகளில் 204 ரன்கள்.. வைபவ் சூர்யவன்ஷி முச்சதம் அடிப்பதும் சாத்தியம்.. கிறிஸ் கெயில் வியப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com