Rahul Gandhi Assets Case: ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகாரில், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
Rahul Gandhi Assets Case: ராகுல் காந்தி மீதான சொத்துக்குவிப்பு புகாரில், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

Published on: November 27, 2026 at 12:24 pm
புதுடெல்லி, நவ.27, 2026: காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகார் தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, பாஜக பிரமுகர் விக்னேஷ் ஷிஷிர் தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ராகுல் காந்தியையும் வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்து, அவரது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என அறிவுறுத்தியது.
மேலும், இந்த மனுவை விசாரிக்க முடியுமா என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் புதிதாக அமைக்கப்படும் அமர்வு விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ராகுல் காந்திக்கு எதிரான சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகள் முடிவுக்கு வரவில்லை; வழக்கு மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு செல்ல உள்ளது.
இதையும் படிங்க : 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்: உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com