53 பந்துகளில் 204 ரன்கள்.. வைபவ் சூர்யவன்ஷி முச்சதம் அடிப்பதும் சாத்தியம்.. கிறிஸ் கெயில் வியப்பு!

Vaibhav Sooryavanshi: இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு வியந்த முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில், ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் முச்சதம் அடிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகப் பாராட்டியுள்ளார்.

Published on: November 26, 2026 at 2:14 pm

சென்னை, நவ.26, 2026: வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 53 பந்துகளில் 204 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இதில் 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். மேலும், 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்த ஆட்டம் குறித்து வியப்பு தெரிவித்த கிறிஸ் கெயில், 28 சிக்ஸர்கள் என்பது நம்ப முடியாத ஒன்று என்றும், 12 ஓவர்களுக்குள் ஒரு வீரர் இரட்டைச் சதத்தை நெருங்கியிருப்பதாகத் தகவல் வந்தபோது, இது டி20 போட்டியா எனக் கேட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், அது 50 ஓவர் போட்டி என்று தெரிந்ததும் ஆச்சரியமடைந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் அடிப்பதற்கான வாய்ப்பையும் வைபவின் ஆட்டம் உணர்த்துவதாகக் கூறிய கெயில், அவர் கிரிக்கெட் விளையாட்டின் போக்கையே மாற்றி வருவதாகப் பாராட்டினார். இளம் வீரர்களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், வைபவ் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 6-வது இடத்துக்கு முன்னேறிய ரிஷப் பண்ட்.. பும்ராவுக்கும் ஏற்றம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com