Arul Vignesh Obscene Message Case: பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகாரின் அடிப்படையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Arul Vignesh Obscene Message Case: பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகாரின் அடிப்படையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: November 25, 2026 at 4:49 pm
சென்னை, நவ.25, 2026: கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் மூலம் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கடந்த 23-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங்கை நியமித்துள்ளதாகவும், ஐ.ஜி. காமினி விசாரணையை கண்காணிப்பார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், விசாரணை தொடர்பாக உள்விசாரணைக் குழு அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் யாரையும் பாதுகாக்க முயற்சிக்கக் கூடாது என்று எச்சரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் மற்றும் புகார் தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதித்தார். சமூக வலைதளங்களில் உள்ள தொடர்புடைய பதிவுகளை நீக்கவும் உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. நவ.28 வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com