சிராஜ் எனது நண்பர்; அவரை அணியில் இருந்து நீக்கியது கடினமான முடிவு.. சுப்மன் கில்

Shubman Gill: சிராஜ் எனது நண்பர்; அவரை அணியில் இருந்து நீக்கியது கடினமான முடிவு என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Published on: November 24, 2026 at 12:54 pm

புதுடெல்லி, நவ.24, 2026: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை அணியில் இருந்து நீக்கியது மிகவும் கடினமான முடிவு என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். சிராஜ் தனது நெருங்கிய நண்பர் என்றும், அவரை அணியில் சேர்க்க முடியாதது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் முதல் டெஸ்ட் போட்டியில் சிராஜுக்குப் பதிலாக அன்ஷுல் கம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டார். அணித் தேர்வில் வீரர்களின் தற்போதைய ஃபார்மே முக்கியமாகக் கருதப்பட்டதாக கில் விளக்கமளித்துள்ளார்.

மேலும், போட்டிக்கு முன்பே சிராஜிடம் நேரடியாகப் பேசி, அவர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என்பதைத் தெரிவித்ததாகக் கூறினார். இந்த முடிவுக்கான காரணத்தை சிராஜ் புரிந்துகொண்டதாகவும், அவர் மீண்டும் கடுமையாக உழைத்து அணிக்குத் திரும்புவார் என நம்புவதாகவும் கில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கில் மற்றும் சிராஜ் இருவரும் ஒன்றாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க : சிஎஸ்கே ஏல மேசையில் தோனி அமர வாய்ப்பில்லை.. இர்பான் பதான்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com