முதலமைச்சர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்.. உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Udhayanidhi Stalin Slams Vijay: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published on: November 23, 2026 at 4:22 pm

Updated on: November 23, 2026 at 4:34 pm

சென்னை, நவ.23, 2026: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (நவ. 22) நடைபெற்ற ‘குடிஅரசு’ இதழின் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். பெரியாரின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தும் விஜய், அவரது கொள்கைகளில் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றைப் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

செஞ்சி பகுதியில் 40 நாட்களுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ள சிறுமியை மீட்கும் விவகாரத்தில் முதல்வர் விஜய் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று உதயநிதி கேள்வி எழுப்பினார். சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினர், காவல் நிலையத்தில் யாகம் நடத்திக்கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், தற்போதைய ஆட்சியில் ஜோதிடம், ஜாதகம், யாகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய உதயநிதி, முதல்வர் எந்த ஊருக்குச் சென்றாலும் முதலில் கோயிலுக்குச் செல்வதாகவும் குறிப்பிட்டார். பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புக் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றுபவர்களே உண்மையான பெரியாரிஸ்டுகள் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, பெரியாரின் கொள்கைகளைத் தேர்வில் விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுப்பதைப் போல சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். அவரது இந்த விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

இதையும் படிங்க : நவ. 24-ல் கனமழை.. சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வாடும் சம்பா பயிர்கள்: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
Cauvery Delta Drought Demand

வாடும் சம்பா பயிர்கள்: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com