சவுக்கு சங்கர் மீதான குற்றவியல் வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Savukku Shankar Case Dismissed: சவுக்கு சங்கர் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Published on: November 20, 2026 at 10:25 am

சென்னை, நவ.20, 2026: சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ‘ரெட் அண்ட் ஃபாலோ’ திரைப்படம் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகவும், அவற்றை நீக்கக் கோரியபோது ரூ.10 லட்சம் கேட்டதாகவும், பின்னர் தயாரிப்பாளரிடம் இருந்து ரூ.1 லட்சத்தைப் பறித்து தாக்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அதை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும், சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இறுதி அறிக்கையில் சவுக்கு சங்கருக்கு எதிரான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அவற்றின் உண்மைத்தன்மையை விசாரணையின்போதுதான் தீர்மானிக்க முடியும் என்றும், வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதா என்பதையும் விசாரணைக்குப் பின்னரே முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதியளித்தார். மேலும், ஆலந்தூர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : மு.க.ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மரணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com