Bharathiyar Song Grammy Nomination: பாரதியார் பாடலுக்கு கிராமி விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது; அந்த வகையில், முதல் தமிழ் பாடலாக சாதனை படைத்துள்ளது.
Bharathiyar Song Grammy Nomination: பாரதியார் பாடலுக்கு கிராமி விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது; அந்த வகையில், முதல் தமிழ் பாடலாக சாதனை படைத்துள்ளது.

Published on: November 18, 2026 at 12:52 pm
சென்னை, நவ.18, 2026: மகாகவி பாரதியாரின் “வருவாய்” பாடலை நவீன இசை வடிவில் உருவாக்கிய தேவன் ஏகாம்பரம் மற்றும் சுஷா ஆகியோரின் இசைப் படைப்பு கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமி பரிந்துரையைப் பெற்ற முதல் தமிழ் பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக செய்தி தெரிவிக்கிறது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய ‘வருவாய்’ பாடலை நவீன இசை வடிவில் உருவாக்கிய இசையமைப்பாளர், பாடகர் தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுஷா (சுபிக்ஷா ரங்கராஜன்) ஆகியோரின் படைப்புக்கு 69-வது கிராமி விருது விழாவில் பரிந்துரை கிடைத்துள்ளது. இதன்மூலம் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
பாரதியாரின் நூற்றாண்டு பழமையான பாடலை, கர்நாடக இசை மற்றும் நவீன இசைக் கூறுகள் இணைந்த புதிய வடிவில் தேவன் ஏகாம்பரம் உருவாக்கியுள்ளார். கிருஷ்ணரை வேண்டிப் பாடும் பக்திப் பாடலான இது, தீமைகளை அழித்து நன்மையை நிலைநாட்ட இறைவன் வர வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தப் பாடல் Best Global Music Performance பிரிவில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுயாதீனமாக வெளியிடப்பட்ட இந்தப் பாடல், பெரிய இசை நிறுவனங்களின் ஆதரவின்றி சர்வதேச இசை அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சூரி – ரவிக்குமார் கூட்டணியில் புதிய படம்.. செம்ம அப்டேட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com