Gold Price Today : தங்கம், வெள்ளி விலையில் அதிரடி சரிவு காணப்படுகிறது.
Gold Price Today : தங்கம், வெள்ளி விலையில் அதிரடி சரிவு காணப்படுகிறது.

Published on: November 18, 2026 at 11:19 am
Updated on: November 18, 2026 at 11:24 am
சென்னை, நவ.18, 2026: சென்னையில் இன்று (நவம்பர் 18) தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) ரூ.97,720 ஆக குறைந்துள்ளது.
24 காரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13,325 ஆகவும், 8 கிராம் ரூ.1,06,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ.2,040 குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.185-க்கும், ஒரு கிலோ ரூ.1,85,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய (நவம்பர் 17) விலையுடன் ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.
அதிரடி விலை சரிவால் தங்கம், வெள்ளி வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து விலை குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் நிலவுகிறது.
இதையும் படிங்க : டிவிஎஸ் குடும்ப சொத்துகளைப் பிரிக்கக் கோரும் லட்சுமி வேணு.. தாய் ஆதரவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com