Naxal Violence Impact: நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகம் பழங்குடியினர்; அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Naxal Violence Impact: நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகம் பழங்குடியினர்; அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Published on: November 16, 2026 at 12:39 pm
புதுடெல்லி, நவ.16, 2026: நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியின மக்கள்தான் என்றும், நக்சல்கள் அவர்களின் வாக்குரிமையைக்கூட பறித்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முந்தைய அரசுகள் இதனை வேடிக்கை பார்த்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ‘ஜன்ஜாதிய கவுரவ் திவஸ்’ நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுப் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
மேலும், பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளதாகவும், கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.3,000 கோடி மதிப்பிலான 246 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையும் படிங்க : “பெருமைமிக்க ஜனநாயகம் விமர்சனக் குரல்களைக் கண்டு அஞ்சுகிறது”.. சசி தரூர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com