விளையாட்டுத் துறையில் போலி பயிற்சியாளர்களைக் கண்காணிக்க புதிய திட்டம்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Fake Sports Coaches: விளையாட்டுத் துறையில் போலி பயிற்சியாளர்களைக் கண்காணிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Published on: November 16, 2026 at 12:24 pm

சென்னை, நவ.16, 2026: தமிழக விளையாட்டுத் துறையில் போக்சோ (POCSO) வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், போலி மற்றும் அங்கீகாரம் இல்லாத பயிற்சியாளர்களைக் கண்டறிய புதிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழகம் முழுவதும் விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும், அவர்களின் கல்வி மற்றும் பயிற்சித் தகுதிகள், விவரங்கள் அடங்கிய மாவட்ட வாரியான தரவுத்தளம் உருவாக்கப்பட்டு, இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும்.

அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களின் விவரங்களைப் பெற்றோர்கள் சரிபார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். போலி பயிற்சியாளர்கள் மற்றும் அங்கீகாரமற்ற விளையாட்டு அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பவர்களின் பின்னணி குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

மேலும், தேசியப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் விமானப் பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என்றும், வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் மற்றும் காப்பீட்டு வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இளம் கேப்டன்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை!

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com