கள்ளக்குறிச்சி விவகாரம்: தலைமைச் செயலர், டிஜிபிக்கு ஆளுநர் அழைப்பு!

Kallakurichi Issue: கள்ளக்குறிச்சி விவகாரத்தில், தலைமைச் செயலர், டிஜிபிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

Published on: November 16, 2026 at 11:34 am

சென்னை, நவ.16, 2026: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் – எம்.எல்.ஏ விவகாரம் மற்றும் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தலைமைச் செயலர் சாய் குமார் மற்றும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலை இன்று (நவ.16) லோக் பவனுக்கு அழைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜாவுக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை எம்.எல்.ஏ மறுத்துள்ளார்.

மேலும், தேனி மாவட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் தீபாவளி பண்டிகையின்போது அடுத்தடுத்து நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்தும் ஆளுநர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் சந்தித்து தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கியிருந்தார். இதற்கிடையே, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் டிஜிபியிடம் 7 நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கை சமர்ப்பிக்கக் கோரியுள்ளது.

இதையும் படிங்க : மத்திய – மாநில உறவு உயர்நிலைக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும்.. 72 முன்னாள் அதிகாரிகள் வலியுறுத்தல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com