Gautham Ram Karthik: கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்துக்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Gautham Ram Karthik: கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்துக்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Published on: November 15, 2026 at 1:56 pm
சென்னை, நவ.15, 2026: நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.
வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவில், கரிசல் மண்ணில் கிடக்கும் சிவப்பு நிற வளையலை நோக்கி ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று பாய்ந்து வந்து அதை உடைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து ‘செங்குலம்’ என்ற தலைப்பு தோன்றுகிறது. இந்த வித்தியாசமான காட்சியமைப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ‘மகாராணி 5’ வெப் தொடர்.. மொட்டையடித்த தோற்றத்தில் ஹுமா குரேஷி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com