Police Recruitment : தமிழக காவல்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், அடுத்த 6 மாதங்களுக்குள் 10,000 புதிய காவலர்களை நியமிக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Police Recruitment : தமிழக காவல்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், அடுத்த 6 மாதங்களுக்குள் 10,000 புதிய காவலர்களை நியமிக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Published on: November 13, 2026 at 7:10 pm
சென்னை, நவ. 13, 2026: தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்கள், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் முறையற்ற செயல்பாடுகள் மற்றும் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்கும் சம்பவங்கள் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் நேற்று (நவ.12) தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்த வாரத்தில் அவர் நடத்தும் 3-வது ஆய்வுக் கூட்டமாகும். இதில் தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
காவல்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அடுத்த 6 மாதங்களுக்குள் 10,000 புதிய காவலர்களை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார். காவல்துறையில் நிலவும் பணியிடப் பற்றாக்குறையைப் போக்க, 10,000 முதல் 15,000 காவலர்களை நியமிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு குற்றப் பின்னணி கொண்ட 19,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மாநிலத்தில் சுமார் 6,700 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2,800 வழக்குகள் மே 10-ம் தேதிக்கு முந்தைய சம்பவங்கள் தொடர்பானவை என்றும், அடையாளம் காணப்பட்ட 3,229 குற்றவாளிகளில் 3,077 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிர்வாகம் மற்றும் காவல்துறை தொடர்பான நடவடிக்கைகளை முதலமைச்சர் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஆல் இஸ் வெல்.. கான்பிடன்டா இருங்க!” – குழந்தைகளுக்கு கேக் வழங்கிய முதலமைச்சர் விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com