வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Fishermen Return Alert : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ள நிலையில், நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published on: November 12, 2026 at 2:27 pm

சென்னை, நவ.12, 2026: வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ள அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளும் நவம்பர் 12-ம் தேதி இரவுக்குள் கரைக்குத் திரும்ப வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மீன்பிடிப் படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீனவர்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை எச்சரிக்கைகள் மற்றும் மீன்வளத்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள்.. ஆளுநரிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Fishermen Return Alert

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன்!
DMK MLA Summoned by Police

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
National Banana Research Institute

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com