3வது மனைவியை பிரிந்தார் பவன் கல்யாண்.. முடிவுக்கு வந்த 13 ஆண்டு திருமண வாழ்க்கை!

Pawan Kalyan Separates from Third Wife : ஆந்திரா துணை முதலமைச்சர் நடிகர் பவன் கல்யாண் தனது 3வது மனைவியை பிரிந்துள்ளார்.

Published on: November 10, 2026 at 6:21 pm

அமராவதி, நவ.10 2026: ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவரது மனைவி அன்னா கொனிடேலா ஆகியோர் 13 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர்.

இருவரும் பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், திருமண உறவு முடிவுக்கு வந்தாலும், நல்ல நண்பர்களாகவும், தங்களது குழந்தைகளுக்குப் பொறுப்பான பெற்றோர்களாகவும் தொடர்ந்து இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் மகிழ்ச்சியும் நலனுமே தங்களது முதன்மையான முன்னுரிமை என்றும், இந்தத் தனிப்பட்ட சூழலில் தங்களது தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் இருவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : நட்சத்திரங்களை விட கதைக்கே முக்கியத்துவம்.. இயக்குநர் சுந்தர் சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com