75 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.. 41 வயதில் இரட்டை சதம் அடித்த கிரேக் எர்வின்!

Craig Ervine Double Century Record: 75 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது; 41ஆவது வயதில் இரட்டை சதம் அடித்துள்ளார் கிரேக் எர்வின்.

Published on: November 10, 2026 at 1:40 pm

ஷார்ஜா, நவ.10, 2026: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் ஆட்டமிழக்காமல் 206 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

41 வயது மற்றும் 82 நாட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச், 40 வயதைக் கடந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருந்தார். சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 40 வயதைக் கடந்த வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 504 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு விளையாடிய ஆப்கானிஸ்தான் 514 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 5 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் எடுத்தது. எர்வின் 206 ரன்களுடனும், வெஸ்லி மதேவெரே 100 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் ஜிம்பாப்வே படைத்தது. இருப்பினும், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ளது.

இதையும் படிங்க : சென்னை ஓபன் டென்னிஸ்.. நடப்பு சாம்பியன் ஜானிஸ் டியனை வீழ்த்தி மக்டா லினெட் சாம்பியன்!

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானின் வெற்றிப் பயணம்!
Zaheer Khan's Business Journey

காலணி கூட இல்லாமல் மும்பைக்கு வந்தவர்… இன்று ரூ.209 கோடி சொத்து மதிப்பு..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com