நட்சத்திரங்களை விட கதைக்கே முக்கியத்துவம்.. இயக்குநர் சுந்தர் சி!

Sundar C on Story Selection: நட்சத்திரங்களை விட கதைக்கே முக்கியத்துவம் அளிக்கிறேன் என இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

Published on: November 10, 2026 at 12:58 pm

சென்னை, நவ.10, 2026: ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்வதில் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்தை விட, கதையின் ஆரம்பகட்டக் கற்பனை மற்றும் புதுமையான சிந்தனைகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். ஒரு காட்சி அல்லது சுவாரஸ்யமான சம்பவம் கூட திரைப்படத்திற்கான கதையாக உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் குறித்து பேசிய அவர், இது 2020-ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல என்றும், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்ட ஃபேண்டஸி த்ரில்லர் என்றும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நிகழ்காலம் மற்றும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம் என இரு காலங்களில் கதை நகர்கிறது. அரண்மனைகள், போர்க்களங்கள் உள்ளிட்ட பிரம்மாண்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படத்தின் சுமார் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் கணினி வரைகலை (CGI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 18 மாதங்கள் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திரைப்படத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி தொழில்நுட்பக் கலைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கக்கூடும் எனக் கவலை தெரிவித்துள்ளார். நகைச்சுவைப் படங்களுக்கு பெயர் பெற்றிருந்தாலும், கதைக்கு ஏற்றவாறு மட்டுமே நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதாகவும், கதையின் ஓட்டத்தைப் பாதிக்கும் வகையில் நகைச்சுவையைத் திணிக்க விரும்புவதில்லை என்றும் சுந்தர் சி கூறியுள்ளார்.

இதையும் படிங்க : துருவ் விக்ரமின் அடுத்த படம் ‘ஜாக்கி’.. இன்று படப்பிடிப்பு தொடக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com