துருவ் விக்ரமின் அடுத்த படம் ‘ஜாக்கி’.. இன்று படப்பிடிப்பு தொடக்கம்!

Dhruv Vikram Jackie Movie Shoot Begins: துருவ் விக்ரமின் அடுத்த படமான ஜாக்கி, இன்று படப்பிடிப்புடன் தொடங்குகிறது.

Published on: November 10, 2026 at 12:29 pm

சென்னை, நவ.10, 2026: நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த திரைப்படமான ‘ஜாக்கி’ படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 10) தொடங்குகிறது. தீபாவளியை முன்னிட்டு சமூக வலைதளத்தில் இதனை துருவ் விக்ரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் ‘கருப்பு’ படத்தின் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த செப்டம்பர் 18-ம் தேதி இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. அதில் துருவ் விக்ரம் ஸ்டண்ட் கலைஞராகத் தோன்றியிருந்தார்.

இப்படத்தில் சாய் தீனா, பிருத்வி ராஜ், அருணாச்சலேஸ்வரன் பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், துருவ் விக்ரம், அசல் கோலார், பால் டப்பா ஆகியோர் பாடல்களுக்கு வரிகள் எழுதுகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி சங்கர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவை விக்கி கவனிக்கிறார். படத்தொகுப்பு ஜெயசூர்யா எஸ். மேற்கொள்கிறார். துருவ் விக்ரமின் புதிய கதாபாத்திரம் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : அரிகொம்பன் டிசம்பர் வெளியீடு.. கேரளத்தில் கவனம்பெற்ற படம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com