அரிகொம்பன் டிசம்பர் வெளியீடு.. கேரளத்தில் கவனம்பெற்ற படம்!

Arikomban Movie Release Date: ‘அரிக்கொம்பன்’ திரைப்படம் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Published on: November 10, 2026 at 12:14 pm

சென்னை, நவ.10, 2026: கேரளாவில் பெரும் கவனம் பெற்ற அரிக்கொம்பன் காட்டு யானையின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் ‘அரிக்கொம்பன்’. இப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஏற்கெனவே சென்னைyil ஒரு நாள், எங்கேயும் எப்போதும், பிரியாணி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் பின்னணியில், அரிக்கொம்பன் யானையையும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. தேவிகா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் பச்சைமலை மற்றும் கொல்லிமலை மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. சகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 11-ம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படிங்க : ‘ஜெயிலர் 2’ வெற்றி.. ரஜினிகாந்த் கொடுத்த ஆச்சரியமான பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com