Kamal Haasan Sandiyar Movie: கமல்ஹாசனின் புதிய படத்துககு சண்டியர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Kamal Haasan Sandiyar Movie: கமல்ஹாசனின் புதிய படத்துககு சண்டியர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Published on: November 7, 2026 at 5:46 pm
சென்னை, நவ.7, 2026: நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு முந்தைய நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள போஸ்டரில், ரத்தக்கறை படிந்த கார், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகளுடன் கமல்ஹாசன் தீவிரமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். “பழிவாங்குதல் ரத்தத்தால் மட்டுமே தீர்க்கப்படும்” என்ற வாசகமும் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார், கமல்ஹாசனுடன் இணையும் முதல் படம் இதுவாகும். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அன்பறிவ் இரட்டையர்கள் சண்டைப் பயிற்சிப் பணிகளை மேற்கொள்கின்றனர். சுனில் கே.எஸ். ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் மற்ற நடிகர்கள், படப்பிடிப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : உலகளவில் ரூ.127.5 கோடி வசூலித்த ‘ராமாயணா’! ‘ஆதிபுருஷ்’ சாதனையை முறியடிக்கத் தவறியது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com