Tamizh Padam 3: இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
Tamizh Padam 3: இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Published on: November 6, 2026 at 1:55 pm
சென்னை, நவ.6, 2026: இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘தமிழ்ப் படம்’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் முதல் தோற்ற போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் சிவாவுக்கு வழக்கமான ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துக்குப் பதிலாக, ‘இன்டர்கேலக்டிக் சூப்பர் ஸ்டார்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. முதல் தோற்ற போஸ்டரில், கோட் அணிந்த சிவா வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலத்தைப் பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. படத்திற்கு ‘ஏலியன் அத்தியாயம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகை அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை எஸ். சசிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி ராமச்சந்திரா தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான முதல் ‘தமிழ்ப் படம்’, தமிழ் சினிமாவின் வழக்கமான காட்சிகள் மற்றும் ஹீரோ பிம்பங்களை நகைச்சுவையாகக் கிண்டல் செய்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2018ஆம் ஆண்டு ‘தமிழ்ப் படம் 2’ வெளியானது. தற்போது மூன்றாம் பாகத்தில் விண்வெளி மற்றும் ஏலியன்களை மையமாகக் கொண்டு நகைச்சுவை பகடி இடம்பெறலாம் என முதல் தோற்ற போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ‘மூக்குத்தி அம்மன் 2’.. விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைந்த பக்திப் படம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com