Asian Champions Trophy: ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்தியா.
Asian Champions Trophy: ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்தியா.

Published on: November 6, 2026 at 1:37 pm
மொஹாலி, நவ.6, 2026: ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் தொடக்கத்திலேயே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தி 3-வது நிமிடத்தில் கசுமாசா மட்சுமோட்டோ மூலம் முதல் கோல் அடித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
இரண்டாவது பாதியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி, 42-வது நிமிடத்தில் ஷிலானந்த் லக்ரா மூலம் முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது. தொடர்ந்து 48-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங், 53-வது நிமிடத்தில் ஜுக்ராஜ் சிங், 54-வது நிமிடத்தில் விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதன் மூலம் இந்திய அணி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2011, 2016, 2018, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பையை வென்றுள்ளது. மேலும், இந்தத் தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியின்றி இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளது.
இதையும் படிங்க : இந்திய டென்னிஸில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் மாயா ராஜேஸ்வரன்.. அதிரடி ஆட்டத்தால் முன்னேற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com