Anna Seer Scheme: அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 60,000 தங்க நாணயங்கள், பட்டுப் புடவைகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
Anna Seer Scheme: அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 60,000 தங்க நாணயங்கள், பட்டுப் புடவைகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

Published on: November 5, 2026 at 3:33 pm
சென்னை, நவ.5, 2026: தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், 60,000 தங்க நாணயங்கள் மற்றும் 60,000 பட்டுப் புடவைகளைக் கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026–27 நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு திருமண உதவிகள் வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின்படி, தகுதியுள்ள மணமகள்களுக்கு தலா 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்படும். தங்க நாணயங்கள் பி.ஐ.எஸ் ஹால்மார்க் தரச்சான்றுடன் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை குடும்ப வருமானம் கொண்ட, தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்குத் தமிழகத்திலேயே திருமணம் நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப் புடவைகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடைமுறைகள் டிசம்பர் மாதத்தில் இறுதி செய்யப்பட உள்ளன. இதன் மூலம் தகுதியுள்ள பெண்களின் திருமணச் செலவுகளுக்கு உதவுவதுடன், திருமண உதவித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க : விசாரணைக்கு ஒத்துழைப்பதால் ஜாமின் வழங்க வேண்டும்.. அன்பில் மகேஷ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com