Southern Railway: நவம்பர் 7ஆம் தேதி வரை நீலகிரி மலை ரயில் சேவையை ரத்து செய்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railway: நவம்பர் 7ஆம் தேதி வரை நீலகிரி மலை ரயில் சேவையை ரத்து செய்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Published on: November 5, 2026 at 2:02 pm
நீலகிரி, நவ.5, 2026: மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையிலான நீலகிரி மலை ரயில் சேவை நவம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்டோபர் 24ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை, நாளை (நவம்பர் 5) மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அடர்லி – குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அக்டோபர் 23ஆம் தேதி இரவு ஏற்பட்ட மண்சரிவில், பெரிய பாறைகள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்தன.
இதையடுத்து, தண்டவாளத்தில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றி, பாதையைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சில பெரிய பாறைகள் வெடிவைத்துத் தகர்த்து அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும், தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் புதிதாக ஏற்படும் மண்சரிவுகளால் சீரமைப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் மற்றும் உதகமண்டலம் – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை நவம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தீபாவளிக்கு காலை 6–7 மணி, இரவு 7–8 மணி மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com