Taxpayer Grievance Committees: மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வரி செலுத்துவோர் குறைதீர் குழுக்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Taxpayer Grievance Committees: மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வரி செலுத்துவோர் குறைதீர் குழுக்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Published on: November 5, 2026 at 11:40 am
சென்னை, நவ.5, 2026: தமிழகத்தில் வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் குறைகளைத் தீர்க்க, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வரி செலுத்துவோர் ஆலோசனைக் குழுக்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வணிகர்கள் மற்றும் தொழில் துறையினர் தங்களது வரி தொடர்பான பிரச்சினைகளை உள்ளூர் அளவிலேயே தெரிவித்து தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, வணிக வரி தொடர்பான பிரச்சினைகள், வரி செலுத்துவோரின் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கும். மாவட்ட ஆட்சியர் குழுவின் தலைவராக இருப்பார். மாநில மற்றும் மத்திய வரித்துறை அதிகாரிகள், மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், விவசாய உற்பத்தியாளர்கள், தொழில் உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள் மற்றும் நுகர்வோர் தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெறுவார்கள். மாவட்டத் தலைமையகத்தில் பணியாற்றும் மாநில வரித்துறை துணை ஆணையர் குழுவின் செயலாளராகச் செயல்படுவார்.
மாவட்ட அளவிலான குழுக்களை நவம்பர் 30ஆம் தேதிக்குள் அமைக்கவும், அவற்றின் முதல் கூட்டத்தை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தவும் வரித்துறை இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் 2029ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோரின் குறைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் மாற்றம்.. ஏ.டி.எம் மூலம் பணம் வழங்க முடிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com