மூக்குத்தி அம்மனாக நயன்தாரா.. காலை 6 மணிக்கே முதல் காட்சி.. முதல்வர் விஜய்க்கு நன்றி!

Mookuthi Amman 2: ‘மூக்குத்தி அம்மன் 2’ படக்குழு முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளது.

Published on: November 4, 2026 at 4:48 pm

சென்னை, நவ.4, 2026: நடிகை நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மகாசக்தி’ திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவினர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளனர். புதிய திரைப்படங்களுக்கு நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியதற்காக இந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் விஜய் மற்றும் திரைப்படத் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 6 மணிக்கே முதல் காட்சியைத் திரையிட அனுமதி அளித்திருப்பது தமிழ் சினிமாவுக்கு ஊக்கமளிக்கும் முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசின் புதிய உத்தரவின்படி, புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியான முதல் வாரத்தில் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை காட்சிகளைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் இந்த அனுமதி பொருந்தும்.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்துக்கு இந்த அறிவிப்பு சாதகமாக அமைந்துள்ளது. கூடுதல் காட்சிகள் மூலம் அதிகமான ரசிகர்கள் திரைப்படத்தைத் திரையரங்குகளில் காண வாய்ப்பு கிடைக்கும் என்றும், அரசின் இந்த நடவடிக்கை தமிழ் திரையுலக வளர்ச்சிக்கு உதவும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : 6 ஆண்டுகளுக்குப் பிறகு மறுமணம்.. மனம் திறந்த பாடகி ரிமி டாமி!

‘பதாய் ஹோ’ தமிழ் ரீமேக்கில் தந்தை கதாபாத்திரத்தில் அஜித்.. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்!
Ajith Kumar Badhaai Ho Remake

‘பதாய் ஹோ’ தமிழ் ரீமேக்கில் தந்தை கதாபாத்திரத்தில் அஜித்.. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com