சூரிய மின்சக்தி உற்பத்தி.. இறக்குமதிச் செலவு 95% மேல் குறைய வாய்ப்பு!

India Solar Energy Growth: இந்தியா சூரிய மின்சக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவரும் நிலையில், நாட்டின் இறக்குமதிச் செலவு 95% மேல் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: November 4, 2026 at 2:47 pm

புதுடெல்லி, நவ.4, 2026: இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்தித் துறையை 2047ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 89 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு தேவைப்படும் என்றும், இதன் மூலம் சுமார் 32.3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் இந்திய சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் (ஐ.எஸ்.எம்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சோலார் பேனல் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கு இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்துள்ளது. இதைக் குறைக்கும் வகையில், பாலிசிலிக்கான், இங்காட்கள், வேஃபர்கள், சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள் என முழுமையான உற்பத்திச் சங்கிலியையும் உள்நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், தற்போது ஆண்டுக்கு சுமார் 4.4 பில்லியன் டாலராக உள்ள சூரிய மின்சக்தி உபகரணங்களுக்கான இறக்குமதிச் செலவு, 2041ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியமாகக் குறைய வாய்ப்புள்ளதாக அறிக்கை கணித்துள்ளது. மேலும், 2047ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய சோலார் மாட்யூல் விநியோகத்தில் இந்தியா 26.5 சதவீதப் பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைய, 2027 முதல் 2047 வரை ஆண்டுக்கு சராசரியாக 4.3 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும். குறிப்பாக, உற்பத்தித் துறையில் கொள்கை ஆதரவு, உள்நாட்டுத் தேவைக்கான சந்தை விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தனியார் முதலீடுகள் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும் என ஐ.எஸ்.எம்.ஏ வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 2030 ஆண்டுக்கு முன்பே பூமி வெப்பமாகும்.. விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com