Ukraine Relief Centre Strike: உக்ரைனில் நிவாரண உதவி மையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது; 45-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ukraine Relief Centre Strike: உக்ரைனில் நிவாரண உதவி மையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது; 45-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 4, 2026 at 2:39 pm
கிவ், நவ.4, 2026: உக்ரைனின் தெற்கு பகுதியில் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டு வந்த மையம் மற்றும் அருகிலிருந்த தங்குமிடத்தின் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 45-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஜபோரிஜியா பிராந்தியத்தின் கொம்யுஷுவாகா கிராமத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து மக்கள் அருகிலிருந்த பாதுகாப்பு மையத்திற்குச் சென்ற நிலையில், அங்கும் குண்டுகள் வீசப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் நான்கு காவல்துறையினரும், இரண்டு மீட்புப் பணியாளர்களும் அடங்குவர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஜபோரிஜியா பிராந்தியத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களில் ரஷ்யா நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் மின் உற்பத்தி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. கார்கிவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 62 பேர் காயமடைந்ததாகவும், மருத்துவமனைகளில் இருந்த 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : அமெரிக்க செனட் சபை தேர்தல்.. ட்ரம்ப்-க்கு பின்னடைவு.. ஜனநாயகக் கட்சி வெற்றி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com