தூத்துக்குடியில் பயன்பாடற்ற கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளை மூட உத்தரவு.. ஐகோர்ட்

Thoothukudi Borewell Safety Order: தூத்துக்குடி மாவட்டத்தில் பயன்பாடற்ற கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: November 4, 2026 at 12:32 pm

மதுரை, நவ.4, 2026: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுச் சாலைகளையொட்டி உள்ள பாதுகாப்பற்ற திறந்தவெளிக் கிணறுகள், பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குவாரிப் பள்ளங்களை ஆறு வாரங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் எஸ்.எம்.ஏ. பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.

கடந்த 2025 மே 17ஆம் தேதி, மீரான்குளம் – சிந்தாமணி சாலையில் பாதுகாப்பற்ற திறந்தவெளிக் கிணற்றுக்குள் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 18 மாதக் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பாதுகாப்பற்ற கிணறுகள் மற்றும் பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரர் நீதிமன்றத்தை நாடினார்.

மேலும், இதுபோன்ற பள்ளங்களில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளும் விழுந்து உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள ஆபத்தான கிணறுகள் மற்றும் பள்ளங்களை மூடி, பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : மகளிருக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள்.. முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com