Daredevil: அஜித்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பார்த்திபன்; ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
Daredevil: அஜித்துடன் மீண்டும் இணைகிறார் நடிகர் பார்த்திபன்; ‘டேர் டெவில்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Published on: November 3, 2026 at 12:06 pm
சென்னை, நவ.3, 2026: நடிகர் அஜித்குமார் நடிக்கும் புதிய திரைப்படமான ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பார்த்திபன், தனது எக்ஸ் தளத்தில் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், சிறந்த நடிகரான அஜித்துடன் திரையைப் பகிர்ந்துகொள்வதும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் பணியாற்றுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அஜித்தும் பார்த்திபனும் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘நீ வருவாய் என’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலா, பிரபு, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிங்க : சீதையாக நடித்தது மன அழுத்தத்தை கண்ணியத்துடன் கையாள கற்றுக்கொடுத்தது.. சாய் பல்லவி நெகிழ்ச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com