Tamil Nadu Power Shortage: தமிழகத்தில் 6,162 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Power Shortage: தமிழகத்தில் 6,162 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Published on: November 3, 2026 at 11:25 am
சென்னை, நவ.3, 2026: தமிழகத்தில் 2027ஆம் ஆண்டுக்கான மின் தேவையை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) மறுமதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மாலை நேர மின் தேவை 24 ஆயிரம் மெகாவாட்டைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, செப்டம்பர் 2027-ல் மாலை நேர மின் தேவை 24,350 மெகாவாட்டாக அதிகரிக்கும் எனவும், அப்போது கிடைக்கக்கூடிய மின்சார அளவு 18,188 மெகாவாட்டாக மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 6,162 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் 5,544 மெகாவாட், ஜூலை மாதத்தில் 5,592 மெகாவாட், ஆகஸ்ட் மாதத்தில் 5,612 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் நினோ தாக்கம் காரணமாக மின் தேவை வழக்கத்தைவிட அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அதிக விலை காரணமாக மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளைத் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள புதிய ஒப்பந்தப்புள்ளி மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யவும், உடன்குடி மற்றும் எண்ணூர் மின் திட்டங்கள் மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தின் வளர்ச்சி புதைக்கப்படுகிறது.. தவெக அரசை விமர்சித்த மு.க. ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com