நாசிக் கும்பமேளா இன்று தொடக்கம்.. 12 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பு!

Nashik Kumbh Mela 2026: நாசிக் கும்பமேளா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது; 12 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: October 31, 2026 at 3:46 pm

மும்பை, அக்.31, 2026: மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மற்றும் திரிம்பகேஸ்வரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிம்ஹஸ்த கும்பமேளா நாளை (அக்டோபர் 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாசிக்கில் உள்ள ராம்குண்ட் மற்றும் திரிம்பகேஸ்வரில் உள்ள குஷாவர்த்த தீர்த்தம் ஆகிய இடங்களில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதில் பங்கேற்க உள்ளார்.

கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான அமிர்த ஸ்நானம் எனப்படும் புனித நீராடல் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது அமிர்த ஸ்நானம் ஆகஸ்ட் 31ஆம் தேதியும், மூன்றாவது அமிர்த ஸ்நானம் செப்டம்பர் 11ஆம் தேதி நாசிக்கிலும், செப்டம்பர் 12ஆம் தேதி திரிம்பகேஸ்வரிலும் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான சாதுக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கும்பமேளா நிகழ்வில் சுமார் 12 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என மகாராஷ்டிர அரசு கணித்துள்ளது. இதற்காக சாலை வசதிகள், போக்குவரத்து, குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, தங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ரூ.22,425 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2028ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொடியிறக்கத்துடன் இந்த கும்பமேளா நிறைவடைய உள்ளது.

இதையும் படிங்க : கேதார்நாத் ஆலயத்தில் பனிப்பொழிவு.. பக்தர்களுக்கு எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com