தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்றைய விலை நிலவரம்!

Chennai Gold Price Drop: சென்னையில் தங்கம் விலை இன்று (அக்டோபர் 31) அதிரடியாகக் குறைந்துள்ளது.

Published on: October 31, 2026 at 3:30 pm

சென்னை, அக்.31, 2026: சென்னையில் தங்கம் விலை இன்று (அக்டோபர் 31) அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,480 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (அக்டோபர் 30) ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,320-க்கும், ஒரு கிராம் ரூ.13,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.310 குறைந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு இந்த விலை சரிவு கவனம் பெற்றுள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 சரிந்து ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.11,440 அதிகமாக உள்ளது. ஒரே நாளில் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் இன்றைய விலை நிலவரத்தைக் கவனித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 33.8% உயர்வு.. ஒரே காலாண்டில் ரூ.29,550 கோடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com