Chennai-Bengaluru Expressway Work: சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகளில், மீதமுள்ள 14 கி.மீ. பணிக்கு ரூ.614 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
Chennai-Bengaluru Expressway Work: சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகளில், மீதமுள்ள 14 கி.மீ. பணிக்கு ரூ.614 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

Published on: October 31, 2026 at 12:16 pm
சென்னை, அக்.31, 2026: சென்னை – பெங்களூரு இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் அதிவிரைவுச் சாலையின் தமிழகப் பகுதியில் மீதமுள்ள 14 கிலோமீட்டர் தூரப் பணிகளை முடிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.614 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 263 கிலோமீட்டர் நீளத்தில், சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 230 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் 71 கிலோமீட்டர் தூரச் சாலை முழுமையாக முடிக்கப்பட்டு போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 106 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரை 92 கிலோமீட்டர் பணிகள் முடிந்துள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், மின்சாரக் கம்பிகள் மற்றும் குடிநீர் குழாய்களை மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமாகின.
இந்த அதிவிரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வந்தால், தற்போது சென்னை – பெங்களூரு இடையே காரில் செல்ல ஆகும் 5 முதல் 7 மணி நேரப் பயணம், சுமார் 3 மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்புகள் மேலும் மேம்படும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை உயர்வு.. மாங்காய் விலை சரிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com