OPS Election Victory Case: ஓபிஎஸ் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
OPS Election Victory Case: ஓபிஎஸ் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: October 31, 2026 at 11:36 am
சென்னை, அக்.31, 2026: போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் டி.கண்ணன் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், 85,206 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 6,805 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இந்த வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி போடிநாயக்கனூரைச் சேர்ந்த டி.கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த பி.மிலானி ஆகிய இருவர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வமும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, போதுமான ஆதாரங்களும் தேவையான சட்டப்பூர்வமான விவரங்களும் மனுவில் இடம்பெறவில்லை என்ற ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று, டி.கண்ணன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தார். அதேநேரத்தில், பி.மிலானி தொடர்ந்த மற்றொரு தேர்தல் வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க : தனியார் பள்ளிகளில் அங்கீகார முறைகேடு வழக்கு: முன்னாள் திமுக எம்எல்ஏ முத்துக்குமார் சரண்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com