Rain Alert: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளை (அக்.31, 2026) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Rain Alert: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளை (அக்.31, 2026) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: October 30, 2026 at 8:18 pm
சென்னை, அக்.30, 2026: வங்கக் கடலின் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை (அக்டோபர் 31) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன் நகர்வு மற்றும் வலிமையைப் பொறுத்து மழையின் தாக்கம் மாறுபடும்.
தமிழகத்தில் இன்று தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை கடலோரத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 2-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், நவம்பர் 1 முதல் 3-ஆம் தேதி வரை சில இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : 3 நாள்களில் 4 கிலோ குறைந்த அன்பில் மகேஷ்.. வழக்கறிஞர் தகவல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com