3 நாள்களில் 4 கிலோ குறைந்த அன்பில் மகேஷ்.. வழக்கறிஞர் தகவல்

Anbil Mahesh: அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது; இந்நிலையில், புழல் சிறையில் 4 கிலோ எடை குறைந்ததாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

Published on: October 30, 2026 at 7:56 pm

சென்னை, அக்.30, 2026: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் ரூ.400 கோடி லஞ்சப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, புழல் சிறையில் வழங்கப்படும் சப்பாத்தியைச் சாப்பிட முடியாததால் அன்பில் மகேஷின் உடல் எடை சுமார் 4 கிலோ குறைந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், இரவு நேரத்திலும் அறையில் விளக்கு எரிவதால் தூக்கம் பாதிக்கப்படுவதாகக் கூறி, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த அரசு தரப்பு, அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தது. போலீஸ் காவலில் விசாரணை நடைபெறும் காலத்தில் அன்பில் மகேஷை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க : அன்பில் மகேஷூக்கு ஜாமின் கிடைக்குமா? நவ.2இல் விசாரணை!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு!
Rain Alert

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com