Tamil Nadu Domestic Workers Minimum Wage: தமிழகத்தில் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு மணிக்கு ரூ.150 குறைந்தபட்ச ஊதியம் வழங்க பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது.
Tamil Nadu Domestic Workers Minimum Wage: தமிழகத்தில் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு மணிக்கு ரூ.150 குறைந்தபட்ச ஊதியம் வழங்க பாதுகாப்புச் சட்டம் கொண்டுவர கோரிக்கை எழுந்துள்ளது.

Published on: October 28, 2026 at 1:11 pm
Updated on: October 28, 2026 at 1:12 pm
சென்னை, அக்.28, 2026: தமிழகத்தில் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு மணிக்கு ரூ.150 குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க விரிவான சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை ஆகியவை தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
வீட்டு வேலைத் தொழிலாளர்கள் அனைவரையும் முறையாகப் பதிவு செய்து, அவர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், தமிழக வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல வாரியத்தை வலுப்படுத்தி, அதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கும் அவர்களைப் பணியமர்த்துவோருக்கும் இடையே எழுத்துப்பூர்வமான வேலை ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், வன்முறை, பாலியல் தொல்லை, சுரண்டல் மற்றும் நியாயமற்ற பணிநீக்கம் ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார்களை எளிதாக அளிக்கவும், இலவச சட்ட உதவி பெறவும் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
பகுதி நேரத் தொழிலாளர்கள், வீடுகளிலேயே தங்கி வேலை செய்பவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் முதிய தொழிலாளர்கள் என அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றும் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை அவ்வப்போது திருத்தி நிர்ணயிக்க வேண்டும் என்றும், வீட்டு வேலைத் தொழிலாளர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மார்பகங்களில் கவனிக்க வேண்டிய 6 மாற்றங்கள்.. புற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com