ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12.. ஆரோக்கியக் கண்காணிப்பில் புதிய வசதிகள்!

Apple Watch Series 12 Health Features: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12இல் ஆரோக்கியக் கண்காணிப்பில் புதிய வசதிகள் குறித்து பார்க்கலாம்.

Published on: October 28, 2026 at 12:38 pm

சென்னை, அக்.28, 2026: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் மற்றும் வாட்ச் ஓ.எஸ் 27 தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியுள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியைக் கண்காணிக்கும் வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.56,900 ஆகும்.

இந்த வாட்சில் இதயத் துடிப்பை அடிக்கடி கண்காணிக்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தூக்கத்தின் தரம், இதயத் துடிப்பு மாறுபாடு (ஹெச்.ஆர்.வி) உள்ளிட்ட அளவீடுகளின் அடிப்படையில் தினசரி உடலின் தயார்நிலையை 1 முதல் 10 வரை மதிப்பிடும் வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் உடற்பயிற்சியைத் தொடரலாமா அல்லது ஓய்வெடுக்க வேண்டுமா என்பதைத் திட்டமிட உதவும்.

மேலும், இ.சி.ஜி, தூக்கக் கண்காணிப்பு, இரத்த ஆக்சிஜன் அளவீடு உள்ளிட்ட ஆரோக்கிய அம்சங்களுடன், 24 மணி நேரம் வரை பேட்டரி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 42 மி.மீ. மற்றும் 46 மி.மீ. அளவுகளில் கிடைக்கும் இந்த வாட்ச், ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவோருக்கு ஏற்ற அணியக்கூடிய சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : டாஸ்மாக்-கில் ரூ.1,000-க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com