Sai Pallavi in Om Movie: தனுஷ் – மம்மூட்டி நடிக்கும் ‘ஓம்’ படத்தில் காவல் அதிகாரியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
Sai Pallavi in Om Movie: தனுஷ் – மம்மூட்டி நடிக்கும் ‘ஓம்’ படத்தில் காவல் அதிகாரியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

Published on: October 27, 2026 at 2:17 pm
சென்னை, அக்.27, 2026: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் மற்றும் மம்மூட்டி இணைந்து நடிக்கும் ‘ஓம் – அத்தியாயம் 1: உதரம் – தி பிளட் வுட்’ (OM – Chapter 1: Udhiram – The Blood Wood) திரைப்படத்தில், நடிகை சாய் பல்லவி நித்யா ரெட்டி என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் சிறப்புக் காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் நித்யா ரெட்டி, ஆந்திர காவல்துறையில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். பின்னர் சிபிஐயில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, இன்டர்போலுடன் இணைந்து பணியாற்றும் அதிகாரியாகக் காட்டப்படுகிறார். செம்மரக் கடத்தலைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கைக்கு அவர் தலைமை தாங்குகிறார்.
இப்படத்தில் தனுஷ் மரம் வெட்டும் தொழிலாளியாகவும், மம்மூட்டி செம்மரக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய கார்த்திகேயன் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஸ்ரீலீலா மற்றும் நசீருதீன் ஷா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். தனுஷ் – மம்மூட்டி முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முதலில் அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போது நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கீர்த்தி சுரேஷின் ‘அக்கா’ வெப் தொடர்.. நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் 30-ல் வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com