Tamilisai on Modi Criticism: பிரதமர் மோடியை விமர்சித்தால் பாஜக வெற்றி பெறும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
Tamilisai on Modi Criticism: பிரதமர் மோடியை விமர்சித்தால் பாஜக வெற்றி பெறும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Published on: October 27, 2026 at 10:49 am
சென்னை, அக்.27, 2026: சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய கருத்துகளைக் கண்டித்து, பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் மோடியை எப்போது விமர்சித்தாலும், தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவதாகத் தெரிவித்தார். கார்கேவின் கருத்துகள் அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம்சாட்டிய அவர், விமர்சனங்கள் பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு உதவுவதாகக் கூறினார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு கால கொள்கைகளை அழிக்க முடியாது என்று தெரிவித்த தமிழிசை, வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆர்) எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாகக் குற்றம்சாட்டினார். பாஜகவின் வெற்றிக்கு வலுவான கட்சி அமைப்பும் தொடர்ச்சியான களப்பணிகளுமே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்துப் பேசிய தமிழிசை, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், குற்றமற்றவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் நிரபராதித்தனத்தை நிரூபித்து வெளியே வரலாம் என்றும் கூறினார். மேலும், தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் திமுக அரசு பள்ளி மாணவர்களின் நலன்களைப் புறக்கணிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க : அன்பில் மகேஷ் கைது.. பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com