Anahat Singh Squash Defeat: சிலிக்கான் வேலி ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்தார் அனாஹத் சிங்.
Anahat Singh Squash Defeat: சிலிக்கான் வேலி ஸ்குவாஷ் போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்தார் அனாஹத் சிங்.
Published on: October 26, 2026 at 11:39 am
நியூயார்க், அக்.26, 2026: அமெரிக்காவில் நடைபெற்ற சிலிக்கான் வேலி ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் தோல்வியடைந்து வெளியேறினார். மலேசியாவின் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சிவசங்கரி சுப்பிரமணியத்துடன் அவர் மோதினார். உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள அனாஹத் சிங், போட்டியின் முதல் ஆட்டத்தை 11-5 என்ற கணக்கில் கைப்பற்றி சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஆனால், அடுத்தடுத்த ஆட்டங்களில் சிவசங்கரி ஆதிக்கம் செலுத்தினார்.
இதையடுத்து, சிவசங்கரி 6-11, 4-11, 7-11 என்ற கணக்கில் அடுத்த மூன்று ஆட்டங்களையும் வென்று, 3-1 என்ற கணக்கில் போட்டியைக் கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம், அனாஹத் சிங்குக்கு எதிரான தனது வெற்றிப் பயணத்தையும் அவர் தொடர்ந்தார்.
அரையிறுதியில் தோல்வியடைந்தபோதிலும், அனாஹத் சிங்குக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக அமைந்தது. முன்னதாக, எட்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற எகிப்தின் நூர் எல் ஷெர்பினியை வீழ்த்திய அவர், பிஎஸ்ஏ கோல்டு நிலை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் குறிப்பிடத்தக்க வீராங்கனையாகத் திகழ்ந்தார்.
இதையும் படிங்க : ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: தடகளத்தில் 65 பதக்கங்கள் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com