நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட்.. தமிழ் ஹீரோக்கள் அதிர்ச்சி!

Mookuthi Amman 2 Cutout: ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக 60 அடி உயரத்தில் நயன்தாரா கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

Published on: October 25, 2026 at 2:36 pm

சென்னை, அக்.25, 2026: நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்காக, தமிழகத்தில் 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட் அவுட், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘மூக்குத்தி அம்மன் 2 – மகா சக்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்திலும், காவல்துறை அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

மேலும், ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகைக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த 60 அடி உயரக் கட் அவுட், படத்தின் வெளியீட்டுக்கு முன்பாகத் திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க : டப்பிங் பேசும் விஜய் சேதுபதி.. அவரே பகிர்ந்த படம்.. பாக்கெட் நாவல் எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com